என்பிபி உறுப்பினர்களின் பாரிய மோசடிகள்! அம்பலப்படுத்திய கம்பஹா பிரதேச சபை எதிர்க்கட்சியினர்...
தேசிய மக்கள் சக்தி கட்சியின் மூன்று உறுப்பினர்கள் தங்களின் பெயர்களில் அரச ஒப்பந்தங்களை மேற்கொள்வதன் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கம்பஹா பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு குற்றம் சாட்டியுள்ளது.
ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,
மோசடிகள்
உள்ளூராட்சி கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒரு பிரதேச சபை உறுப்பினர் ஒப்பந்தப் பணிகளில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அத்தகைய ஒப்பந்தங்கள் மூலம் பணம் பெறுவது உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கு ஒரு காரணம் என்று அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேல் மாகாண ஆளுநருக்கும் முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

இதற்கிடையில், கம்பஹா பிரதேச சபையின் தலைவர் ஒவ்வொரு மாதமும் 500 லீட்டர் எரிபொருளைப் பெற்று பொதுப் பணத்தை வீணடிக்கிறார். ரூ.250,000 மாதாந்த வாடகை அடிப்படையில் ஒரு காரை வாடகைக்குக்கும் எடுத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபை நிதியைச் சேமிப்பதாக உறுதியளித்து ஆயிரக்கணக்கான குடிமக்களின் வாக்குகளைப் பெற்ற போதிலும், பிரதேச சபைத் தலைவர் மாதத்திற்கு ரூ. 500,000 க்கும் அதிகமான கொடுப்பனவைப் பெறுவதாகவும், அதில் அவர் பயன்படுத்தும் வாகனமும் அடங்கும் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri