எந்த கட்சியுடனும் இணைவதற்கான அவசியம் எமக்கில்லை : நாமலின் அதிரடி அறிவிப்பு
எமக்கு எந்த கட்சியிலும் இணைந்து செயற்படுவதற்கான அவசியமும் இல்லை.ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும்.அது எங்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
அவர்கள் ஒன்றாக இருக்கும் போதே நாம் வெற்றி பெற்றோம் என மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் இப்போது எந்த தேர்தலும் இல்லை.அத்தோடு எமக்கு அவ்வாறான எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை.
மொட்டு கட்சியின் பலம்
கிராமத்தில் மொட்டுக் கட்சியை பலப்படுத்தும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
தொடர்ந்துரையாற்றிய அவர், எம்மை விட்டுப் போன பலர் எமது கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.மக்களின் உண்மையான பிரச்சினையை கண்டு கொண்டு மக்களுக்கு பொய் சொல்லாத உண்மையை பேசுவோர் எம்மோடு இருக்கின்றனர்.

அவர்கள் மக்களின் பிரச்சினையை நன்கறிந்து வைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri