வர்த்தக போருக்கு மத்தியில் ட்ரம்பை சந்திக்கவுள்ள ட்ரூடோ
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையே எதிர்வரும் புதன்கிழமை இரு தரப்பு பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், இரு தரப்பு தலைவர்கள் பேசுவதற்கு முன்பு வர்த்தக சமரசம் குறித்த கூடுதல் விவரங்கள் வகுக்கப்பட வேண்டும் என்று கனேடிய தொழில்துறை மற்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்களில், மேம்படுத்தப்பட்ட எல்லைப் பாதுகாப்பு விதிகள் மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு இணங்கும் வரி விலக்குகள் போன்றவை இதற்கு முக்கிய அம்சமாக எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ட்ரம்ப் நிர்வாகம்
புதிய ட்ரம்ப் நிர்வாகத்தின் எஃகு வரிகளிலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி பல்வேறு நாடுகள் பேச்சுவர்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்றதன் பின்னர் எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கு 25 சதவிகித வரிகளை அறிவித்த நிலையில், வர்த்தகத்தை சார்ந்திருக்கும் பல நாடுகளின் பொருளாதாரத்திற்கு உலகளாவிய வர்த்தகப் போரின் அபாயங்கள் ஆபத்தான முறையினை உறுவாக்கியுள்ளன.
ஏப்ரல் முதல் அமெரிக்காவுடனான வர்த்தக கூட்டாளிகள் மீதான பரஸ்பர வரி விதிப்பும் நடைமுறைக்கு வரும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |