இலங்கை ஜனாதிபதிக்கு சீன அமைச்சர் ஓதும் வேதம்..!

Anura Kumara Dissanayaka Sri Lanka Government Of Sri Lanka China
By T.Thibaharan Mar 04, 2025 10:31 PM GMT
T.Thibaharan

T.Thibaharan

in கட்டுரை
Report

சீனாவின் தேசிய இன விவகார அமைச்சர் பான் யூ (Pan Yue), தலைமையிலான உயர்மட்ட சீனக் குழு (பெப்19 முதல் 23) இலங்கைக்கு வருகை தந்திருந்தது. இந்த உயர்மட்ட குழு ஜனாதிபதி அநுர குமாராவுடன் பலதரப்பட்ட பேச்சுக்களில் ஈடுபட்டது.

ஒரு கட்டத்தில் மூடிய அறைக்குள் அநுரவுக்கு சீன அமைச்சர் ஞான உபதேசம் வழங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஞான உபதேசம் எதைப் பற்றியதாக இருக்கும் என்பது ஆராய்வது மிக அவசியமானது.

சீனாவின் இன விவகார அமைச்சர் இலங்கையின் இனப் பிரச்சினை சார்ந்தே அதிகம் பேசி இருப்பார். அவர் என்ன பேசி இருப்பார்? என்பது பற்றி ஆழமாக ஆராய்வது அவசியமானது. இந்த விவகாரம் சார்ந்து "இந்தோ-சீன இணைவின் மூலமாக இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நடைமுறைச்சாத்தியமான ஆசியப் பிராந்திய முறைமையை கண்டறிய முடியும்" என்றும் "சீனாவின் தேசிய இனவிவகார அமைச்சருடன் அநுர மாகாண சபை முறைமையை மையப்படுத்திப் பேச வேண்டும்"" என்றும் சிங்களத்தின் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜயத்திலக்க கருத்து தெரிவித்திருக்கிறார்.

முள்ளிவாய்க்கால் 

இடதுசாரிக் கொள்கையில் மூழ்கி எழுந்து ஜே. ஆரின் அரவணைப்பில் வளர்க்கப்பட்ட, பிரேமதாசவால் வளர்ந்த ராஜபக்சர்களினால் முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் ஐ.நா வுக்கான இலங்கையின் பதிவிடபிரதியாக கலாநிதி தயான் ஜயத்திலக்க கடமை ஆற்றியவர். இப்போது இவர் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் ஒரு தமிழ் மக்களும் சாகாத யுத்தம் (Zero casuality) என வியாக்கியானம் தந்தவர்.

இலங்கை ஜனாதிபதிக்கு சீன அமைச்சர் ஓதும் வேதம்..! | Sri Lankan Political Situation Article In Tamil

இங்கே இதன் பொருள் என்னவெனில் "பூஜ்ஜிய சேதாரம்" என்பதாகும். ஒரு பேரழிவு அல்லது அவசரகாலத்தில் காயமடைந்த அல்லது கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கையை மறைப்பது, தவிர்ப்பது, அல்லது குறைத்து மல்லினப்படுத்துவதை அல்லது தம்தரப்பை நியாயப்படுத்துவதை அப்பட்டமாக வெளிப்படத்தி நின்றது. எந்தவிதமான மனித உரிமை மீறல்களும் இடம்பெறவில்லை என்பதை அடித்துக் கூறியவர்.

இது ஒரு வகையான இராணுவ உத்தியையும் குறித்து நிற்கிறது. அது மாத்திரமல்ல இதனை இனக் குரோத சிந்தனையின் உச்சத்தை அவர் வெளிப்படுத்தியதாகவே அமைந்திருக்கிறது. இவ்வாறு பேசிய இந்த இனவாதச் சிங்கள ராஜதந்திரியின் வலியுறுத்துகையை தமிழர் தரப்பு மிகவும் எச்சரிக்கையுடன் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் "இலங்கையின் தேசிய இன நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் பற்றி சீன அமைச்சர் பான் யூ 'இலங்கை சகாக்களுடன்' பேச்சுவார்த்தை நடத்துவார்" என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.

அதில் குறிப்பிடப்படும் "இலங்கை சகாக்கள்" என்ற சொல்லாடலையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த “சகாக்கள்“ என்பது தோழர்கள் என்ற பொருளைத் தருகிறது. சீனாவில் இடதுசாரி தோழர்கள் சீனாவுக்குள் இருக்கின்ற தேசிய இனங்களின் உரிமைகளை நிராகரிக்கிறார்கள். தேசிய இனங்களை ஒடுக்குகிறார்கள். தேசிய இனங்களை பேரினமயமாக்குகிறார்கள்.

சீன - சிங்களத் தோழர்கள்

ஆகவே சிறுபான்மையினரை ஒதுக்குகின்ற, அழிக்கின்ற, தன்இனமயமாக்கல் செய்கின்ற சீனத் தோழர்கள் இப்போது சிங்களத் தோழர்களுக்கு எப்படி இப்படி சிறுபான்மையினரை அழித்தொழிப்பு செய்வது பற்றி மந்திராலோசனை நடத்தினார்களா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். சீனாவில் 200க்கும் மேற்பட்ட சிறுபான்மை தேசிய இனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் அதிகாரப்பூர்வமாக, சீன அரசாங்கம் 56 தேசிய இனங்களை மட்டுமே அங்கீகரித்துள்ளது.

இந்த 56 இனங்களில் ஹான் மக்கள் பெரும்பான்மையாக 91% உள்ளனர், மற்றைய 55 தேசிய இனங்கள் சிறுபான்மையினர் எனக் கருதப்படுகின்றனர். எனினும் சிறுபான்மையேர் 10 கோடி என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் இதில் பல சிறிய இனக்குழுக்கள் இன்னும் தனிப்பட்ட இனங்களாக அங்கீகாரமளிக்கப் படவில்லை. இதனால், சில நுண்ணிய இனங்களும் அதிகாரப்பூர்வமாக உள்ள 55 சிறுபான்மை இனங்களில் ஒன்றாக அடங்கிக் காட்டப்படுகிறது.

சீனாவின் அண்டை நாடான திபெத்தை 1950 ல் சீன ராணுவம் ஆக்கிரமித்தது. 1951 மே 23 அதிகாரபூர்வமாக சீனாவுடன் திபெத்தை இணைத்துக் கொண்டு விட்டனர். திபெத்தியர்களின் இறைமை நிராகரித்து அவர்களுடைய நாட்டை சூறையாடி அவர்களுடைய சுயநிர்ணய உரிமையை மறுக்கிறார்கள்.

இதனால் திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய்லாமா தலைமையில் இந்தியாவிலிருத்து தமது சுயநிர்ணய உரிமையை வேண்டி போராடுகிறார்கள். இத்தகைய சீன அரசு உலகளாவிய தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை எப்படி அங்கீகரிப்பர்? அப்போதும் தாய்வானை ஆக்கிரமிப்பதற்கு கங்கணம் கட்டி நிற்கின்றனர். இத்தகைய சீனாவிடம் தேசிய இனங்கள் பற்றிய பார்வை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய சீனா 1983 ஆம் ஆண்டு தேசிய சிறுபான்மை இனங்களுக்கான தீர்வாக எடுக்கப்பட்ட முடிவை 2001 இல் திருத்தம் செய்து தேசிய சிறுபான்மையினருக்கான சட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

 தேசிய சிறுபான்மையினர்

அது Regional Ethnic Autonomy Law(பிராந்திய இன சுயாட்சி சட்டம்) என்பதாகும் இதில் பயன்படுத்தப்படுகின்ற Regional Ethnic Autonomy எனப்படும் பிராந்திய இன சுயாட்சி என குறிப்பிடப்படுவது தேசிய சிறுபான்மையினர் வாழும் பிரதேசத்தில் நிர்வாக அதிகாரத்தை மாத்திரமே வழங்கி உள்ளார்கள். இங்கே நிர்வாக அதிகாரம் என்பது மத்திய அரசால் விதிக்கப்பட்டு இருக்கின்ற சட்ட விதிகளை நடைமுறைப்படுத்துகின்ற நிர்வாக அதிகாரம் மட்டுமே.

ஆகவே தேசிய சிறுபான்மையினர் தங்களுக்கான எந்தவிதமான உரிமைகளையும் சட்டங்களையும் தாமே பெறவே இயற்றவே முடியாது. தமக்கான அதிகாரங்களை அவர்களால் அங்கே பெற்றுக் கொள்ள முடியாது.

ஒட்டு மொத்தத்தில் பார்த்தால் சீனாவின் தேசிய சிறுபான்மையினர் மத்திய அரசின் ஊழியர்களாக அதாவது அரசின் உதிரிப்பாகமாக செயல்படுவதாகவே அது அமையும். இதுதான் சீனா தேசிய இனங்களின் பிரச்சினைக்கு தனது நாட்டில் தீர்வாகக் கொண்டுள்ளது. இத்தகைய சீனாவின் இன விவகார அமைச்சர்தான் இப்போது இலங்கைக்கு வந்து சென்றுள்ளார்.

இலங்கை ஜனாதிபதிக்கு சீன அமைச்சர் ஓதும் வேதம்..! | Sri Lankan Political Situation Article In Tamil

அவர் அநுரவின் பாதுகாக்குள் ஓதிய வேதம்தான் என்ன? இதனை இன்னும் சில நாட்களில் எதிர்கொள்ளப்படும் தேர்தலில் சிங்களத் தோழர்களின் ஈழத் தமிழர் பிரச்சினை சார்ந்து முன்வைக்கும் கருத்துக்களில் இருந்து அறிய முடியும். ஆயினும் அதற்காக நாம் காத்திருக்காமல் அது பற்றி முன்னெச்சரிக்கையுடன், முன் உணர்வுடனும் தமிழர்கள் தம்மை தயாராக்க வேண்டும். முதலில் இந்த பான் யூ யார்? இவர் இன்றைய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின்(Xi Jinping’) அமைச்சரவையின் சீனாவின் தேசிய இனவிவகார அமைச்சர் (Chinas Ethnic Affairs Minister) . சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) மத்திய குழுவின் உறுப்பினரானார்.

பான் யூ சீனாவின் சிறுபான்மை விவகாரங்களைக் கையாளும் பணியில் ஈடுபட்டு சிறுபான்மையினங்களின் குரல்களை நசுக்குவதில் வெற்றி பெற்றவர். அத்தகைய ஒரு சீனாவின் இன ஒடுக்களில் பாண்டித்தியம் பெற்ற அமைச்சரை சிங்களத்தின் தலைவர்கள் அழைத்து மந்திராலோசனை நடத்துவது என்பதும் ஞான உபதேசம் பெறுவது என்பதும் வீடு கொளுத்தும் மன்னனுக்கு கொல்லி கொடுக்கும் ஒரு மந்திரியாகவே பான் யூ உபதேசித்திருப்பார் என்பதுதான் எதார்த்தம். சீனா இலங்கை இனப் பிரச்சினை சார்ந்து கடந்த காலங்களில் எத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சீனாவின் வெளிவரக் கொள்கை இன விவகாரங்களில் தலையிடாமை என்பதுவே திட்டவட்டமன நிலைப்பாடாகும். சீன அரசு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளது. தேசிய இனப் பிரச்சினை என்பது உள்நாட்டு பிரச்சினை என்றும் அதனை உள்நாட்டுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு அரசினுடைய இறைமையில் பிறநாடுகள் தலையிடக்கூடாது, தலையிட முடியாது என்பதுதான் அதனுடைய உறுதியா நிலைப்பாடு.

ஒடுக்குமுறை அரசு

இங்கே இறைமை என்பதன் பெயரால் ஓர் அரசு செய்யும் அநீதிகளை அங்கீகரிப்பது, அரசுடன் அரசாக கூட்டிச்சேர்ந்து தன் நலன்களை அடைவதையே கவனத்தில் கொள்ளும், சீனா மனித உரிமைகள் சார்ந்து அது ஒருபோதும் கவனத்தில் கொண்டது கிடையாது. ஆனால் இங்கே ஒரு விசித்திரம் என்னவென்றால் ஒரு நாட்டின் இனப்படுகலையோ, அல்லது அதனுடைய மனித உரிமை மீறல்களையோ தட்டிக் கேட்காமல் ஒடுக்குமுறை அரசுக்கு ஆதரவளிப்பது என்பது ஒரு வகையில் தலையீடாகவே அமைகிறது.

ஒடுக்குமுறை அரசுக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு இன ஒடுக்குமுறைக்கும், இன அழிப்பு முறைமையிலும் தலையீடு என்றே பொருள்படுகிறது. இது ஒரு தெளிவான தலையீடாகவே பார்க்கப்பட வேண்டும். இவ்வாறு தலையிடாமை என்பது தன்னுடைய சர்வதேச அரசியல், பொருளியல் நலன் சார்ந்து அது தலையிடாமல் அதே நேரத்தில் ஒடுக்குமுறை அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு தன் நலனை அடைந்திருக்கிறது.

இதனை கடந்த கால சீனாவின் அரசியல் வெளி விவகார செயற்பாடுகள் அனைத்தும் அவ்வாறே அமைந்திருக்கிறது. இந்த அடிப்படையில்தான் இலங்கை இன பிரச்சினையில் முள்ளிவாய்க்கால் மனித பேரவலத்தின் போது இலட்சக்கணக்கானோர் இனப்படுகொலை செய்யப்பட்ட பின்னரும் அது ஒரு உள்நாட்டு பிரச்சினை என்றும், அதனை தீர்த்துக் கொள்ளும் வல்லமை இலங்கை அரசுக்கு உண்டு எனவும் கடந்து சென்றது.

இலங்கை ஜனாதிபதிக்கு சீன அமைச்சர் ஓதும் வேதம்..! | Sri Lankan Political Situation Article In Tamil

அதோடு நின்றுவிடாமல் ஐநா மனித உரிமைகள் அவையில் இலங்கை இனப்படுகொலை தொடர்பாக எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களிலும் ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு ஆதரவாகுமே சீனா வாக்களித்து இருக்கிறது. அதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள சீனத் தூதரங்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் இனப் பிரச்சினை சார்ந்து பேசுவதற்கு நேரத்தை ஒதுக்கி தரும்படி விண்ணப்பித்த போது அதனை நிராகரித்து சந்திப்பதற்கு சீன தூதுவர்கள் மறுத்தும் விட்டார்கள்.

அத்தோடு விண்ணப்பித்தவர்களுக்கு “நீங்கள் இலங்கையில் உங்கள் அரசியல் தலைவர்களுடன் பேசிக் கொள்ளுங்கள் அல்லது அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்“ என்று அறிவுரை கூறினார்கள் என்பதையும் இங்கே சுட்டி காட்ட வேண்டும்.

சீனாவின் வெளியுறவு கொள்கை என்பது அரசுக்கும் அரசுக்குமான உறவாகவே எப்போதும் அமைந்துள்ளது. ஒரு அரசு உள்நாட்டில் செய்யும் எத்தகைய மனித படுகொலைகளையும், இன ஒடுக்கு முறைகளையோ, அநீதிகளை பற்றியோ அது ஒருபோதும் பேசுவதில்லை. இதிலிருந்து சிறுபான்மையின ஒடுக்குமுறைக்கு ஆதரவளிக்கும் நாடகவே அதனைப் பார்க்க முடியும்.

எனவே உலக அரங்கில் இன ஒடுக்குமுறை, மனித உரிமை மீறல் நாடுகளின் நண்பனாகத்தான் சீனா இருக்கிறது. இத்தகைய சீனாவின் இன விவகார அமைச்சர் இலங்கை இன பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு வழி சொல்லப் போகிறார் என்பது விசித்திரமானது.

இதில் உள்ள மர்மங்கள் என்ன? ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகளை சீனா இலங்கை அதிபருக்கு உபதேசிப்பதற்கான அவசரமும் அவசியமும் என்ன? இதற்குப் பின்னே ஆழமான சர்வதேச அரசியல் ஒன்று உண்டு. அந்த அரசியல் இந்து சமுத்திரத்தை மையப்படுத்தியே இப்போது மையம் கொண்டுள்ளது. இதனை தமிழர்கள் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். சீன ஓநாய் அநுரவின் காதில் ஓதும் வேதம் ஈழத் தமிழருக்கும், இந்தியாவிற்கும், இந்து சமுத்திர நாடுகளின் அரசியலுக்கும், இந்தப் பிராந்திய அமைதிக்க்கும், சமாதானத்திற்கும் நல்லதல்ல. 

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 04 March, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

5ம் ஆண்டு, 31ம் நாள் நினைவஞ்சலிகள்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை

03 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்வேலி, Paris, France

18 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு, யாழ்ப்பாணம்

21 Feb, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, முரசுமோட்டை, Pickering, Canada

18 Feb, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom

07 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அடம்பன், மன்னார்

21 Mar, 2015
மரண அறிவித்தல்

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புளியங்குளம், Scarborough, Canada

15 Mar, 2025
நினைவலைகள்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Rosny-sous-Bois, France

20 Mar, 2023
மரண அறிவித்தல்

கரம்பன், பாண்டியன்தாழ்வு, Fontainebleau, France

13 Mar, 2025
மரண அறிவித்தல்

ஆறுகால்மடம், Stavanger, Norway

14 Mar, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, Scarborough, Canada

15 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Ilford, United Kingdom, Birmingham, United Kingdom

04 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Kingsbury, United Kingdom

19 Mar, 2024
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Stavanger, Norway

15 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Jaffna, நெடுங்கேணி, கொம்மந்தறை

18 Mar, 2015
மரண அறிவித்தல்

ஊறணி, திருச்சி, India, பரிஸ், France

10 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Bochum, Germany, London, United Kingdom, Hayes, United Kingdom, Slough, United Kingdom

13 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US