வெலே சுதாவின் சகோதரனுடைய கத்திக்குத்துக்கு இலக்காகி பொலிஸ் உத்தியோகத்தர் காயம்
பிரபல போதைப்பொருள் வர்த்தகர் வெலே சுதாவின் சகோதரனுடைய கத்திக்குத்துக்கு இலக்காகி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்தச்சம்பவம் நேற்று மாலை கல்கிஸ்ஸை, படோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தின் கீழ் செயற்படும் படோவிட்ட பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையொன்றின் போது ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை மடக்கிப்பிடித்து கைது செய்யமுற்படும் போது, சந்தேக நபர் தன் இடையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்க முற்பட்டுள்ளார்.
சந்தேகநபரை தேடும் பொலிஸார்
இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தரின் வயிறு, முழங்கை என்பவற்றில் காயம் ஏற்பட்டுள்ளது. சந்தேக நபர் அப்பிரதேசத்தை விட்டும் தப்பிச் சென்றுள்ள நிலையில், பொலிசார் அவரைத் தேடி வருகின்றனர்.

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர், களுபோவிலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri