கொழும்பில் அச்சத்தில் தப்பியோடிய நபர் நடு வீதியில் மரணம்
கொழும்பு, நுகேகொட பகுதியில் பாதசாரிகள் கடவையில் விழுந்து காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கொஹுவல, மல்வத்த வீதிப் பகுதியில் மாணவனை கூரிய ஆயுதத்தை காட்டி மிரட்டி 3,000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த நபரால் அச்சமடைந்த மாணவன் பணத்தை கொடுத்து விட்டு சத்தமாக கூச்சலிட்டுள்ளார்.
பொலிஸார் சந்தேகம்
சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த பலர் ஒன்றுகூடிய நிலையில், குறித்த நபர் பணத்தை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதன்போது அவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வெட்டுக்காயங்கள்
எனினும் உயிரிழந்த நபரின் தலையில் வெட்டுக்காயங்களுடன் நலந்தராம வீதி பகுதியின் நடைபாதையில் கிடந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். எனினும் அந்த நபரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 23 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
