மன்னாரில் திருடப்பட்ட பல இலட்சம் பெறுமதியான நகைகளுடன் மூவர் கைது
மன்னார்- சாந்திபுரம் பகுதியில் கடந்த சிவராத்திரி தினத்தன்று இரவு திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மன்னார் பொலிஸாரால் நேற்று (15) மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில். மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த சிவராத்திரி தினத்தன்று பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்டிருந்தது.
[CJPPSZ
மூவர் கைது
இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட தேடுதல் மற்றும் விசாரணைகளின் போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து சுமார் 28 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் சாந்திபுரம் மற்றும் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த 28,29,33 வயதுடைய நபர்கள் என தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட மூவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்தநிலையில் ,குறித்த சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam