பொலிஸார் வேடத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை சம்பவம்
பொலிஸ் உத்தியோகத்தர் என கூறிக்கொண்டு கொள்ளை சம்பவம் ஒன்றில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டி - கட்டுகஸ்தோட்டையில் கடந்த 17ஆம் திகதி சந்தேகநபர் மேலும் பலருடன் இணைந்து இந்த கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு நேற்றையதினம்(24.09.2023) கைதானவர் பகமூன பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளை சம்பவம்
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கண்டி - கட்டுகஸ்தோட்டையில் கடந்த 17ஆம் திகதி சந்தேகநபர் மேலும் பலருடன் இணைந்து இந்த கொள்ளை சம்பவத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த கொள்ளை சம்பவத்தில் திருடப்பட்ட மாணிக்கக்கல் சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான நீல நிற மாணிக்கக்கல் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணிக்கக்கல்லை தான் வாங்க விரும்புவதாக முறைப்பாட்டாளருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, சந்தேக நபர் தனது சகா ஒருவருடன் காரில் வந்து மாணிக்கத்தை பரிசோதித்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பொலிஸ் அதிகாரி போல் வேடமணிந்து வந்த மற்றுமொரு சந்தேகநபர், மாணிக்கத்தை கொண்டு வந்த நபரை அச்சுருத்தி, மாணிக்கக்கல்லுடன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, பொலிஸ் வேடமணிந்து கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபரை பொலிஸார் நேற்றையதினம்(24.09.2023) கைது செய்துள்ளனர்.
மேலும், ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
