கிளிநொச்சியில் டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்
கிளிநொச்சி (Kilinochchi) பூநகரி பரந்தன் வீதியில் சைகையை மீறி சென்ற டிப்பர் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (16-07-2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்துக்குட்பட்ட குடமுருட்டி பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்ந்து சென்ற டிப்பர் வாகனத்தை சோதனையிட முற்பட்ட சமயம் பொலிஸாரின் சைகையை மீறி டிப்பர் வாகனம் வேகமாக பயணித்துள்ளது.
பொலிஸார் விசாரணை
குறித்த வாகனத்தை சுமார் 13 கிலோமீற்றர் தூரம் துரத்திச் சென்ற பொலிஸார் வாகனத்தின் மீது பூநகரி பகுதியில் வைத்து மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அதில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேநேரம், டிப்பர் வாகனத்தில் பயணித்த ஏனைய இருவர் தப்பி ஓடிய நிலையில், ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தின் போது கிளிநொச்சியை சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
