வடக்குக்கு மாகாணம் தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணத்திற்கு போதைப்பொருள் தம்புள்ளையில் இருந்தே கைமாற்றப்படுவதாக மாத்தளை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
மாத்தளை மாவட்டத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸாருக்கு சன்மானம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தம்புள்ளைக்கு வரும் போதை பொருள்
தொடர்ந்து பேசிய அவர்,
“வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது. கடந்த காலங்களில் தம்புள்ளையில் மட்டும் மேற்கொண்ட சோதனைகளில் பிடிப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் இது தெரியவந்துள்ளது.

இவை தம்புள்ளை, சிகிரியா, கலேவெல போன்ற பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதனால் இந்த வலையமைப்பை உடைக்க வேண்டும். கடந்த காலங்களில் எனக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.
எனது மகனை, கணவனை போதைப்பொருள் பாவனையில் இருந்து மீட்டுத் தாருங்கள் என்று.மேலும் புனருத்தாபனத்திற்கு அனுப்புங்கள் என்கின்றனர். எமக்கு புனருத்தாரனம் செய்வதற்கு பெரும் தடையுள்ளது.

ஏனென்றால் போதைப்பொருக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்வு மையத்துக்கு செல்வதில் பெரும் விருப்பம் காட்டுவதில்லை. அதற்கு நாம் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை காணப்படுகிறது.
இதற்கு முன்னர் கிராமத்தில் போதைப்பொருள் இருக்கவில்லை. இன்று ஹொரோயினுக்கு அதிகமாக ஐஸ் போதைப்பொருள் இருக்கிறது.
பொலிஸாராக நாம் இதை ஒரு தொழிலுக்கு அப்பால் சென்று சமூக கடமையாக செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |