பொது மக்களுக்கு அவசர அறிவிப்பு - எரிபொருள் நிலையங்களில் களமிறக்கப்படும் பொலிஸார்
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதி பாதுகாப்புப் பொறுப்பதிகாரியான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள தேவையற்ற பதற்றம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பாரிய வாகன நெரிசலும் நீண்ட வரிசைகளும் உருவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பொலிஸ் பாதுகாப்பு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பொதுமக்கள் பதற்றமடையத் தேவையில்லை.
QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், அந்தந்த வாகன வகைகளுக்கு ஏற்பத் தேவையான எரிபொருள் அளவு முறையாக வழங்கப்படும். மக்கள் காட்டும் தேவையற்ற அவசரமே எரிபொருள் நிலையங்களில் இவ்வளவு கூட்ட நெரிசலுக்குக் காரணமாகியுள்ளது.

பொது மக்கள் அமைதி காக்கவும்
இதனால், அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் தலைமையகப் பொலிஸ் பரிசோதகர்களை நாம் ஈடுபடுத்தியுள்ளோம். பொது மக்கள் அமைதி காத்தால் இந்தப் பிரச்சினை ஏற்படாது. 10 லீற்றர் தேவைப்படும் இடத்தில் 50 லீற்றர் அடிக்க முற்படுகிறார்கள். இவை அனைத்தும் அவசரப்படுவதால் ஏற்படும் விளைவுகள்.
யுத்த நிலைமை காரணமாகக் கொண்டுவரப்பட்ட ஒரு முகாமைத்துவமே இது. உங்கள் வாகனத்திற்குத் தேவையான எரிபொருளை எந்தவொரு நிலையத்திலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும். எனவே, வீதி நெரிசலைக் குறைக்கவும் ஒழுங்கைப் பேணவும் போக்குவரத்துப் பொலிஸாரும் ஏனைய அதிகாரிகளும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் என கூறியுள்ளார்.
இன்று முதல் QR அடிப்படையில் எரிபொருள் விநியோகம்! வாகனங்களுக்கான எரிபொருள் அளவு குறித்து வெளியான தகவல்
குறிவைக்கப்பட்ட ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்: அதிரடி தாக்குதல் நடத்திய உக்ரைன் News Lankasri
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri