ஈரான் - இஸ்ரேல் மோதல் தீவிரம் : தீர்ந்துவரும் ஏவுகணைகள் - அமெரிக்காவிடம் அவசர உதவி கோரிய இஸ்ரேல்
ஈரானுடனான மோதல் தொடர்வதால், பாலிஸ்டிக் ஏவுகணை இடைமறிப்பான்கள் மிகக் குறைவாக இருப்பதாக இஸ்ரேல் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது என்று அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி செமாஃபோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் அதன் ஆதரவு ஆயுதக் குழுக்களுடன் தொடர்ந்து நடைபெற்று வரும் போரினால், இந்த தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
இஸ்ரேலின் நீண்ட தூர பாதுகாப்பு அமைப்பு ஈரானின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் தனது ஏவுகணைகளில் கொத்து வெடிமருந்துகளைச் சேர்ப்பதாகவும், இது இருப்பு குறைவை அதிகரிக்கக்கூடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இஸ்ரேலிய அதிகாரிகள் இது குறித்து அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri