பேஸ்புக் காதலால் பொலிஸ் காவலருக்கு ஏற்பட்ட விபரீதம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
வலான ஊழல் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் காவலர் தனது சேவை துப்பாக்கியால் நேற்று அதிகாலை சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் பேராதனை முருதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அவர் நேற்று பிரதான வாயில் கடமைக்காக மற்றுமொரு அதிகாரியுடன் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
விபரீத முடிவு
இந்த நிலையில் இயற்கை உபாதையை கவனிப்பதற்காக சென்றுவிட்டு மீண்டும் வந்து, அதிகாலை 4.05 மணியளவில் T56 ரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பொலிஸ் காவலர் உடனடியாக பாணந்துரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்புக்கான காரணம்
நான்கரை வருட சேவைப் காலத்தைக் கொண்டுள்ள காவலர், பேஸ்புக் ஊடாக அறிமுகமான யுவதி ஒருவருடன் உறவில் இருந்துள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாகவே இவ்வாறு தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri