ஆற்றில் குதித்த சந்தேகநபரை பிடிக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த பரிதாபம்
ஆற்றில் குதித்து காணாமல்போயிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் இன்று (24.11.2023) மீட்கப்பட்டுள்ளது.
ஜா - எல பொலிஸ் நிலைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அழைத்துச் செல்ல முற்போது அவர் தப்பிச் செல்வதற்காக ஆற்றில் குதித்துள்ளார்.
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
இந்த நிலையில் சந்தேகநபர் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், சந்தேகநபரை பிடிப்பதற்காக ஆற்றில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போயிருந்தார்.
இதனை தொடர்ந்து அவரை தேடிவந்த நிலையில் இன்று சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய சாவகச்சேரியைச் சேர்ந்த 26 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |