கொழும்பிலுள்ள பாதுகாப்பு கெமராக்கள்:நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள்
கொழும்பில் போக்குவரத்தை கண்காணிக்க பொருத்தப்பட்டுள்ள கிட்டத்தட்ட 130 பாதுகாப்பு கெமராக்களில், பல்வேறு கோளாறுகள் காரணமாக ஐம்பதுக்கும் மேற்பட்ட கெமராக்கள் செயல்படாமல் போய்விட்டதாக பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் கெமரா கண்காணிப்புப் பிரிவால் கண்காணிக்கப்படும் இந்த கெமராக்கள் முறையாகப் பராமரிக்கப்படாததாலும், நவீன கெமராக்கள் பொருத்தப்படாததாலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொருத்தப்பட்டுள்ள கெமராக்கள்
கொழும்பில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பிற்காக இந்த கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் போக்குவரத்து விதிமீறல்களைச் செய்யும் சாரதிகளை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் செயல்முறை சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கோளாறுகளுக்குள்ளாகியுள்ள கெமராக்களை கொண்டு போக்குவரத்து விதி மீறல்களைச் செய்யும் சாரதிகளை கண்டுபிடிப்பது கடினமான செயற்பாடு என குறிப்பிடப்பட்டுள்ளது.
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri