'டித்வா' சேதப்படுத்திய தொடருந்து பாதைகளை புனரமைக்க இந்திய உதவி
'டித்வா' சூறாவளியில் பாதிக்கப்பட்டுள்ள தொடருந்து பாதைகளை இந்திய நிதி உதவியுடன் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, ரம்புக்கனையிலிருந்து பேராதனை வரையிலான தொடருந்து பாதையை இந்தியா வழங்கிய கடன் வசதியைப் பயன்படுத்தி புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரம்புக்கனை-கடுகன்னாவ வரையான பாதை புனரமைப்புக்காக மதிப்பிடப்பட்ட செலவு 74 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
மதிப்பிடப்பட்டுள்ள செலவு
கடுகன்னாவ-பேராதெனிய தொடருந்து பாதையின் கட்டுமானத்திற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வடக்கு தொடருந்து சேவையின் மஹவ-ஓமந்தை பிரிவை புனரமைக்க இந்திய உதவியுடன் மதிப்பிடப்பட்ட 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பயன்படுத்தப்படும்.

இந்தப் பிரிவின் புனரமைப்புக்கான நிதியை மானியம் மூலம் வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
'டித்வா' நாடாளுமன்ற தேர்வுக் குழு தலைமை எதிர்க்கட்சிக்கு வேண்டும்: கயந்த கருணாதிலக்க எம்.பி கோரிக்கை
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri