பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொதுமக்களை கடுந்தொனியில் திட்ட முடியுமா!
பொதுமக்களை பொலிஸ் உத்தியோகத்தர்கள் திட்டக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களுடன் செயற்படும் போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடுந்தொனியில் திட்டக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களை திட்டும் அதிகாரிகளுக்கு எதிராக கடுயைமான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நபரையும் பொலிஸார் கடுந்தொனியில் திட்ட முடியாது எனவும் அதற்கான அதிகாரம் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டால் விசாரணை நடத்த தயங்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். சாதாரண பொதுமக்களின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மையில் சில சுற்றி வளைப்புக்களின் போது பொலிஸார் கடுந்தொனியில் சிலரை திட்டிய விவகாரம் தொடர்பில் விமர்சனங்கள் எழுப்பப்பட்ட நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.