பொலிஸாரின் மிருகத்தனமான செயற்பாடு: அங்கஜன் எம்.பி கண்டனம்

Sri Lanka Police Jaffna Angajan Ramanathan Northern Province of Sri Lanka Crime
By Rakesh Nov 21, 2023 09:28 AM GMT
Report

மனித உரிமைகளை மதிக்காது மிருகத்தனமாகச் செயற்பட்ட யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையப் அதிகாரிகள் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படும் நிலையில் அது தொடர்பாக வெளியிட்ட கண்டன அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், 

"சித்தங்கேணியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

மீறப்படும் மனித உரிமைகள்

இவ்வாறான பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறுவது இது முதல் தடவை அல்ல. ஆனால், இதுவே இறுதிச் சம்பவமாக இருக்க வேண்டும்.

சந்தேகநபர்களைத் தாக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை. இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கே உண்டு. ஆனால், இங்கு பொலிஸார் சந்தேகநபர்களை வலுக்கட்டாயமாகக் குற்றவாளிகளாக்கி விடுகின்றார்கள்.

பொலிஸாரின் மிருகத்தனமான செயற்பாடு: அங்கஜன் எம்.பி கண்டனம் | Police Brutality Angajan Mp Condemns

சந்தேகநபர்களை மனிதராக மதிப்பதுமில்லை. மனித உரிமைகளை மதிக்கத் தெரியாத பொலிஸார் எந்தத் தருணத்திலும் பொலிஸாராக இருக்கத் தகுதியற்றவர்கள்.

வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைது செய்த இளைஞரை பொலிஸ் காவலரணில் வெளிப்படையாகக் காட்சிப்படுத்தவில்லை, இளைஞரின் குடும்பத்தாரிடம் இளைஞரை வெளிப்படுத்தவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக 24 மணித்தியாலத்துக்குள் நீதிமன்றில் முற்படுத்த வேண்டிய சந்தேகநபரை நான்கு தினங்கள் பிரத்தியேக மறைவிடம் ஒன்றில் வைத்து உணவு கொடுக்காது மிருகத்தனமாகத் தாக்கியுள்ளனர்.

உரிய நீதி

இளைஞரின் மரணத்துக்கு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சகல பொலிஸாரும் பொறுப்புக் கூற வேண்டும்.

உடனடியாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் இளைஞரின் மரணத்துடன் தொடர்புபட்ட பொலிஸார் அனைவரது பதவிகளும் பறிக்கப்பட்டு - அவர்கள் கைது செய்யப்பட்டு பக்கச்சார்பற்ற விசாரணை இடம்பெற்று தண்டனை வழங்கப்பட வேண்டும்.

பொலிஸாரின் மிருகத்தனமான செயற்பாடு: அங்கஜன் எம்.பி கண்டனம் | Police Brutality Angajan Mp Condemns

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொலிஸ் நிலையங்களில் சந்தேகநபர்களை மறைத்து வைத்து தாக்கி தமது வாக்குமூலங்களைத் திணிப்பதற்கான பிரத்தியேக இடங்கள் இருப்பதனை அறியமுடிகின்றது.

மனித உரிமைகளைப் பேணும் நிறுவனங்கள் பலவும் செயற்பட்டு வரும் நிலையில், பொலிஸாரின் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.


உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டிய அதேநேரம் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக வெப்பநிலை 3 செல்சியஸால் உயர்வடையக்கூடும்: ஜனாதிபதி சுட்டிக்காட்டு

இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக வெப்பநிலை 3 செல்சியஸால் உயர்வடையக்கூடும்: ஜனாதிபதி சுட்டிக்காட்டு

நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்ற நிலை: சஜித்தின் கையில் இருந்து பறித்துச் செல்லப்பட்ட கோப்புகள் (Video)

நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்ற நிலை: சஜித்தின் கையில் இருந்து பறித்துச் செல்லப்பட்ட கோப்புகள் (Video)

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US