றம்புக்கனையில் கொன்று புதைக்கப்பட்ட இரண்டு இளைஞர்கள்! பொலிஸார் வெளியிட்ட தகவல்
2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காணாமல் போன ஒருவரின் சடலம் றம்புக்கனையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காணாமல் போனதாகக் கூறப்படும் இருவரின் சடலங்களைத் தேடுவதற்காக நேற்று மாலை றம்புக்கனையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
காணாமல் போன இளைஞர்கள்
ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, இருவர் படுகொலை செய்யப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் மாவனல்லை பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்ட இருவர் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காணாமல் போனவர்களின் உறவினர்கள் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
போதைப்பொருள் வியாபாரம்
போதைப்பொருள் வியாபாரம் ஒன்றின் அடிப்படையில் இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தல்துவா தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ள போதிலும், இது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனல்லை பொலிஸார் மற்றும் கேகாலை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் இருவரும் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam

தித்திப்பான சர்க்கரைப் பொங்கல் ரெசிபி- சர்க்கரை நோயாளருக்கு பாதிப்பு இல்லாமல் செய்வது எப்படி? Manithan
