சிங்கள நடிகை தமிதாவுக்கு எதிராக வழக்குத் தொடுக்க பொலிஸார் முயற்சி
பிரபல சிங்கள திரைப்பட நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு எதிராக வழக்குத் தொடரும் முயற்சியொன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கொரியாவுக்கு அனுப்புவதாகக் கூறி தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் 30 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.
முறைப்பாடு தொடர்பில் விசாரணைக்கு வருமாறு பொலிஸாரால் வழங்கப்பட்ட நோட்டீஸ் புறக்கணிக்கப்பட்டமையினால் நீதிமன்றில் ஆஜராகுமாறு தமிதா மற்றும் அவரது கணவருக்கு நோட்டீஸ் வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கோட்டை நீதவான்
எனினும், பொலிஸாரின் அறிக்கையில் சந்தேகநபர்களாக இருவரும் பெயரிடப்படாததால் நீதிமன்றத்தால் அறிவித்தல் வழங்க முடியாது என கோட்டை நீதவான் திலின கமகே தெரிவித்தார்.
அத்துடன், உரிய முறையில் உத்தரவுகளை கோருமாறு கூறியுள்ள கோட்டை நீதவான் திலின கமகே, பொலிஸாரின் வேண்டுகோளின் பிரகாரம் நோட்டீஸ் வழங்க முற்பட்டால், எதிர்காலத்தில் வீதியில் செல்பவர்களுக்கும் நோட்டீஸ் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
