சம்பள அதிகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை
சமீபத்திய சம்பள திருத்தத்தின் மூலம் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் 50 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் 70% அதிகரிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் மத்திய வங்கியினால் ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் சம்பள அதிகரிப்பு பற்றிய குற்றச்சாட்டுகளை இலங்கை மத்திய வங்கி மறுத்துள்ளது.
அவகாசம்
மேலும்,சமீபத்திய சம்பள திருத்தத்தின் மூலம் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் 50% அதிகரித்துள்ளதாகவும், அதன் நியாயத்தை நாடாளுமன்றத்தில் விளக்குவதற்கு மத்திய வங்கி அவகாசம் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்திய வங்கியின் அதிக சம்பளம் பெறும் அதிகாரிகள் தமது சம்பளத்தில் 36% வரியாக செலுத்துவதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அம்பானி உடன் இணையும் சுந்தர் பிச்சை, மார்க் ஜூக்கர்பெர்க்! ரூ.855 கோடிக்கு உருவாகும் புதிய திட்டம் News Lankasri

சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்- பிக்பாஸ் பிரபலங்களுக்கு குவியும் வாழ்த்துகள் Manithan
