மொட்டுக்கட்சி ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச - வெளியான அறிவிப்பு
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் மாத்தளை மாவட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் நாமலை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்ற பிரேரணைக்கு உள்ளூராட்சி பிரதிநிதிகள் ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த கூட்டத்தில் கட்சியின் செயலாளர் எம்.பி சட்டத்தரணி சாகர காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டே கொட, இந்திக்க அனுருத்த, ஜனக திஸ்ஸ குட்டியாராச்சி ரோஹன திஸாநாயக்க மற்றும் மாத்தளை மாவட்ட சிறி லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பெரும்பாலானோர் கருத்து
எனினும், இந்தக் கூட்டத்திற்கு பொதுஜன பெரமுனவின் மாத்தளை மாவட்ட அமைப்பாளர் ஜனக பண்டார தென்னகோன் மற்றும் அவரது மகனும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான பிரமித பண்டார தென்னகோனும் அழைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிம்பத்தை பயன்படுத்துவதன் மூலம் எதிர்வரும் தேர்தலில் கணிசமான ஆதாயங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அங்கு கூடியிருந்த பெரும்பாலானோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
