சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - மகிந்தவின் சூளுரை
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் கையொப்பமிட்டுள்ளார்.
அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை சபாநாயகர் மீறியுள்ளதாகத் மீறியுள்ளதாக தெரிவித்தே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட உள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணை
மேலும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், திஸ்ஸ அத்தநாயக்க, சந்திம வீரக்கொடி மற்றும் ஷான் விஜயலால் டி சில்வா ஆகியோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.
நிகழ்நிலை காப்பு சட்டத்தை நிறைவேற்றும் போது சபாநாயகர் செயற்பட்ட விதம் தொடர்பில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.
பிரேரணை தோற்கடிக்கப்படும்
இந்நிலையில், நெலும் மாவத்தையிலுள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினரால் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஊடகவியலாளர்கள் மகிந்த ராஜபக்சவிடம் கேள்வியெழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |