கனடாவில் இருந்து யாழ். வந்த நபர் பரிதாபகரமாக உயிரிழப்பு
கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
மூச்சு எடுப்பதற்கு சிரமப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்றையதினம் (26.2.2024) உயிரிழந்துள்ளார்.
கனடாவில் வசிக்கும் சோதிலிங்கம் கந்தசாமி என்பவரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாதகலில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு வருகை தந்திருந்தார்.
இந்நிலையில் அவருக்கு நேற்றையதினம் (25) மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்டதால் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
You My Like This Video
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
