யாழில் விசர் நாய் கடித்து இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு - வைத்தியசாலை விடுத்துள்ள கோரிக்கை
புதிய இணைப்பு
யாழ்ப்பாணத்தில் நாய் கடிக்கு இலக்கான இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஆவரங்கால் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த பிரதாபன் ஷாலமன் என்ற 23 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த இளைஞனை கடித்த விசர்நாய் வேறு யாரையும் கடித்திருக்கலாம் என கருதப்படுவதால் அப்பகுதியில் அண்மையில் நாய்க்கடிக்கு உள்ளானோர் வைத்தியசாலை நாடுவதுடன், உயிரிழந்த இளைஞனுடன் பழகியவர்கள் வைத்தியசாலையை நாடுவது சிறந்தது என அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணத்தில் நாய் கடிக்கு இலக்கான இளைஞன் சிகிச்சை பலனின்றி இன்று (26) உயிரிழந்துள்ளார்.
மணற்பகுதி ஆவரங்கால் கிழக்கு பகுதியைச் சேர்ந்த
பிரதாபன் சாலமன் (வயது 22) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பலன்றி உயிரிழப்பு
குறித்த இளைஞன் சில நாட்களுக்கு முன்னர் நாய் கடிக்கு இலக்கான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி - கஜி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
