குருணாகல் போதனா வைத்தியசாலையில் தொடரும் திடீர் மரணங்கள்
குருநாகல் மருத்துவமனையில் அண்மைக்காலமாக ஏற்பட்ட டயாலிசிஸ் என்ற கூழ்மப்பிரிப்பு நோயாளிகள் பலரின் மரணத்துக்கு சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட இரசாயனம் காரணமாக இருக்கலாம் குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில் மருத்துவமனையின் டயாலிசிஸ் பிரிவு தற்காலிகமாக பெப்ரவரி 23 அன்று மூடப்பட்டது, இந்தப்பிரிவில் சந்தேகத்திற்கிடமான நோய்த்தொற்று காரணமாக நோயாளிகளின் தொடர்ச்சியான இறப்புகள் இந்த ஆண்டு ஜனவரி முதல் பதிவாகியுள்ளன.
டயாலிசிஸ் சிகிச்சை
இரத்த ஓட்டத்தில் நுழைந்த கிருமிகள் அல்லது டயாலிசிஸ் செயல்முறையின் போது நிர்வகிக்கப்படும் இரசாயனங்களால் ஏற்படும் தொற்று காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பதை அறிய நிறுவன மட்டத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சகமும் 5 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இதற்கிடையில் இரத்தம் ஏற்றுதல் நடைமுறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த நிபுணர்களைக் கொண்ட இரு உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார செயலாளர் பாலித மஹீபால தெரிவித்துள்ளார்.
இதேவேளை டயாலிசிஸ் தேவைப்படும் சிறுநீரக நோயாளர்களை குளியாப்பிட்டிய, நாரம்மல, தம்பதெனிய நிக்கவெரட்டிய மற்றும் நிகவெவ மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்ப குருநாகல் போதனா மருத்துவமனை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
மேலும்,டயாலிசிஸ் சிகிச்சையின் போது அவர்களின் பிளேட்லெட் எண்ணிக்கை அளவுகள் வேகமாகக் குறைந்ததால் ஏற்பட்ட சிக்கல்களால் ஐந்து நோயாளிகளும் இறந்ததாக அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன.
எவ்வாறாயினும், இந்த மரணங்களுக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என குருநாகல் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெந்தனகமுவ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
