ஐ.நாவின் மூன்று நாடுகளை கையகப்படுத்த ஈழத்தமிழர்கள் தீவிரமாக செயற்பட வேண்டும்! சட்டத்தரணி உமாகரன்
ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு எந்தவொரு சிறு நாடும் அரவணைத்து போகவேண்டிய நாடு தான் என சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான உமாகரன் ராசையா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம் எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
திட்டமிடல்
கொடிகாமத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு எந்தவொரு சிறு நாடும் அரவணைத்து போகவேண்டிய நாடு.எனவே அதற்குரிய சரியான திட்டமிடல்களை நாம் செய்ய வேண்டும்.
ஐக்கிய நாடுகளில் அதிகாரமிக்க ஐந்து நாடுகளில் குறைந்தது மூன்று நாடுகளையாவது எங்களுடன் வைத்துக்கொள்ளும் விசுவாசமான இன குழுமமாக தமிழர்கள் எப்படி மாற வேண்டும் என சிந்திக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
