மலேசியாவில் கைதான பாதாள உலகக்கும்பலை சேர்ந்த மூவர்! விரைவில் வெளியாகவுள்ள அதிகாரப்பூர்வ தகவல்கள்
மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கையை சேர்ந்த பாதாள உலகக்கும்பல் உறுப்பினர்கள் மூவர் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்று அல்லது நாளை வெளியிடப்படலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் உதயகுமார வூட்லர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களையும் இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சி.டி.விக்ரமரத்னவின் இறுதி நிமிடங்களில் இடப்பட்ட உத்தரவு.. ஒரு சில நிமிடங்களில் பிரிந்த உயிர்! உணர்ச்சிவசப்பட்ட 16 வருட கால விசுவாசி
பிரபல பாதாள உலகக்கும்பல் தொடர்பு
கைது செய்யப்பட்டுள்ள இந்த மூன்று நபர்களில், பிரபல பாதாள உலகக்கும்பல் தலைவரான 'கஞ்ச்பானி இம்ரானின்' நெருங்கிய சகா ஒருவரும் அடங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இவர்கள் மலேசியாவில் எவ்வாறு கைது செய்யப்பட்டார்கள் என்பது குறித்தான தெளிவான தகவல்கள் இன்று அல்லது நாளைக்குள் வெளிவரக்கூடும் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பு பிறந்த நாள் விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு! வங்கி கணக்கிலிருந்து கைமாற்றப்பட்ட பணம் - சிக்கிய சந்தேகநபர்