ஓட்டமாவடி பிரதான வீதிகளில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் சோதனை
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஓட்டமாவடி பிரதேசத்தில் பிரதான வீதிகளில் தேவையின்றி வரும் மக்களைச் சோதனை செய்து வீட்டுக்குத் திருப்பி அனுப்பி வைக்கும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இன்று புதன்கிழமை இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில், தேவையின்றி மக்கள் வெளிச் செல்வதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு பிரிவினர் சோதனை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர்.
பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் அனுமதி பெற்றவர்கள் மற்றும் மருந்தகங்கள் என்பவற்றுக்குச் செல்பவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், தேவையின்றி வெளியில் செல்பவர்களைப் பரிசோதனை செய்து வீடுகளுக்குத் திருப்பி அனுப்பியுள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மருந்தகங்கள் மாத்திரம் திறந்து
காணப்படுவதுடன், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தொடர்ந்து பாதுகாப்பு
நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.




