ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கை வந்தவர் உயிரிழப்பு
அளுத்கம மொரகல்ல பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் ஓய்வெடுக்க வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
77 வயதான போலந்து நாட்டவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் இன்று(02.11.2023) மதியம் சுற்றுலா உணவகத்துக்கு அருகில் கடலில் நீராடச் சென்ற போது கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
அலையில் சிக்கிய அவர் மீட்கப்பட்டு பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாகொட போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு பேருவளை மரண விசாரணை அதிகாரி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
