கனடாவில் வேலைக்கு செல்ல காத்திருந்த இளைஞர், யுவதிகளின் பரிதாப நிலை
கனடா உட்பட பல வெளிநாடுகளில் தொழில் பெற்று தருவதாக கூறி இலங்கை இளைஞர், யுவதிகளை ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளது.
பாணந்துறை பிரதேசத்தில் பல இளைஞர், யுவதிகளை ஏமாற்றி பணம் பெற்ற நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நபர் ஒருவர் பாணந்துறையில் பணம் வசூலிப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இந்த சந்தேக நபர் கனடாவில் வேலை பெறுவதற்கான ஒப்பந்தத்திற்காக சட்டத்தரணியுடன் வருமாறும், வரும் போது 5 லட்சம் ரூபாய் பணமும் கொண்டுவர வேண்டும் எனவும் அவரிடம் வரும் இளைஞர் யுவதிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய விசாரணை அதிகாரி ஒருவர் சட்டத்தரணி போன்று நடித்து சந்தேக நபரை சந்திக்க சென்றுள்ளார். அங்கு 5 லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்வதற்கு சந்தேக நபர் தயாரான போது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சுமார் 50 மில்லியன் ரூபாய் பணம் இவ்வாறு மோசடியான முறையில் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam
