உலகை உலுக்கும் பிளாஸ்டிக் மாசு
உலக மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் குப்பைகளின் அளவும் அதற்கேற்றால் போல் அதிகரிக்கிறது.
நவீன வாழ்க்கை முறையில் மக்களால் உபயோகிக்கப்படுகின்ற, இலகுவில் தூக்கி வீசக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களான தண்ணீர் மற்றும் குளிர்பான போத்தல்கள் உட்பட பல்வேறு அசேதன கழிவுகள் சூழலுக்கு பெரும் அச்சுறுதலாக அமைகிறது.
இதன்மூலம் சூற்றுசூழல் அதிகளவில் மாசுப்படுத்தப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. மேலும் பிளாஸ்டிக்கில் நச்சு தன்மை அதிகமாக இருப்பதால் வளி, நீர் மற்றும் நிலம் அதிக மாசடைகிறது.
அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகள் ஓர் இடத்தில் சேர்க்கப்படுவதானது தாவரங்களையும், வன விலங்குகளையும், பொது மக்களையும் அதிகம் பாதிப்புக்குள்ளாக்குகிறது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த இலகுவானது.
மேலும் பொருளாதார ரீதியில் அனைவராலும் உபயோகிக்க இலகுவானது என்பதால் இப் பொருட்களின் மீதான மக்களின் கேள்வி அதிகமாக இருக்கிறது.
என்றாலும் இதனால் சூழலுக்கு ஏப்படும் தீங்கை மக்கள் பொருட்படுத்துவதில்லை. இன்னும் சிலருக்கு பிளாஸ்டிக் பாவனையால் சுற்றுசூழலுக்கு ஏப்படும் மற்றும் உடலுக்கு ஏற்படும் தீங்கு பற்றிய போதிய விழிப்புணர்வு கிடையாது என்பதும் உண்மை.
பிளாஸ்டிக்கில் அடங்கியுள்ள நச்சு தன்மை குறைவதில்லை
பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளை வெறும் குளிர்பான போத்தல்களையும், குடிநீர் போத்தல்களையும் சேகரித்து மறுசுழற்சிக்கு உட்படுத்துவது தீர்வாகாது.
மேலும் சந்தைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் மலிவான விலையில் கிடைப்பதால் அவை அதீத அளவுகளில் பயன்படுத்தப்படுகின்றது. இதனை முழுமையாக கட்டுப்படுத்துவது நடைமுறையில் இன்று இயலாத காரியமாகிவிட்டது.
முறையாக அப்புறப்படுதப்படாத பிளாஸ்டிக் கழிவுகள் நிலத்தை மாசுப்படுத்துகிறது. இன்னும் சொல்லப்போனால் பிளாஸ்டிக் பொருட்களில் உள்ள நச்சு பொருட்கள் நிலத்தில் புதைத்தாலும் நிலத்தில் கலந்து தாவரங்கள், மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் மற்றும் பூச்சி இனங்களை அழித்துவிடக்கூடிய தன்மை கொண்டது.
அதுமட்டுமன்றி பிளாஸ்டிக்கின் நீரை உரிஞ்சாத தன்மை காரணமாக நிலத்தில் பிளாஸ்டிக் அதிகளவில் உள்ள இடங்களில் மழைநீர் உட்செல்லாது நிலத்தடி நீர் மட்டம் குறைவடைக்கிறது. இதனால் விவசாய நிலங்களும் பாதிப்படைகின்றது.
பிளாஸ்டிக் கழிவுகள் நீரில் கலப்பதால் கடல் நீர் மாசடைவதுடன் கடல்வாழ் உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும். மேலும் இக் கழிவுகளை ஏரியூட்டினால் அதன் நச்சு பதார்த்தங்கள் காற்றில் கலந்து காற்றை மாசுப்படுத்துகின்றது.
இதன் இலகுவில் உக்காத தன்மை சூழலுக்கு பெரும் சவாலாக அமைகின்றது. பிளாஸ்டிக் பொருட்களின் ஆயுள் காலம் அதிக ஆண்டுகள் என்பதால் அவை மக்குவதற்கு நீண்ட காலம் தேவைப்படுகின்றது. அதனை மண்ணில் புதைத்தாலும் மறுசுழற்சி செய்தாலும் அதில் அடங்கியுள்ள நச்சு தன்மை ஒருபோதும் குறைவதில்லை.
சுவாச கோளாறுகள் ஏற்படும்
இது சூழலுக்கும் மனிதர்களுக்கும் நேரடியாக தீங்கு விளைவிக்கின்ற போதிலும் இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கின்றதே தவிர சற்றும் குறைவதில்லை என்பதே வருந்தத்தக்க விடயம்.
மிக நுண்ணிய அளவில் நிலத்தில் பிளாஸ்டிக் காணப்பட்டாலும் பிளாங்டன் உட்பட பல தாவரங்களையும் நுண்ணுயிர்களையும் அழித்துவிடுகின்றது. இதனால் அதனை சார்ந்து வாழும் உயிரினங்களும் பாதிப்படைந்து ஒட்டுமொத்த உணவு சங்கிலியும் அறுபடுவதற்கான அபாயத்தை தோற்றுவிகின்றது.
மேலும் வெட்ட வெளியில் ஏறியூட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து நச்சு வாயுக்கள் காற்றில் கலப்பதால் இதனை சுவாசிக்கும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் சுவாச கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.
பிளாஸ்டிக் எனப்படுவது மனிதர்களால் பல்வேறு வேதிப்பொருட்களை மூலப் பொருட்களாக கொண்டு உற்பத்தி செய்யப்படும் ஒரு நச்சு பொருளாகும். இதனை தொடர்ச்சியாக பயன்படுத்துவது உயிருக்கு ஆபத்தானது.
அதுமட்டுமன்றி உலகளாவிய ரீதியில் குப்பைகளின் மூலம் அரசுக்கு அதிக செலவீனங்கள் ஏற்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
குப்பைகளை அப்புறப்படுத்த உரிய இடங்களை தெரிவு செய்வது முதல் அப்புறபடுத்தும் வரை அதிக செலவுகளை அரசாங்கம் மேற்கொள்கிறது.
சூழலுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து அறியாமையே காரணம்
மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரிப்பத்தால் சுற்றுலா துறையின் வருவாய் இழப்புக்கும் வழிவகுக்கிறது. அரசாங்கம் பிளாஸ்டிக் பொருட்களை இல்லாதொழிக்க எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்ட வண்ணமே இருக்கின்றது.
இருப்பினும் வணிகர்களாலும் நுகர்வோரின் செய்கையாலும் இது சாத்தியப்படுவதில்லை. இதற்கு முக்கிய காரணம் மக்கள் மத்தியில் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையால் தங்களுக்கு ஏப்படும் பாதிப்பு பற்றியும் சூழலுக்கு ஏற்படும் ஆபத்து பற்றியும் போதிய அறிவின்மையே.
பிளாஸ்டிக் பொருட்களை குறைத்து சூழலை பாதுகாக்க அரசாங்கம் மட்டும் முயற்சித்தால் போதாது. ஒவ்வொரு தனி மனிதனும் இணைந்ததே நாடு. எனவே நாம் ஒவொருவரும் இதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும். பிளாஸ்டிக் பாவனையை குறைக்க எம்மாலான முயற்சிகளை செய்ய வேண்டும்.
பாரிய மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்த தேவையில்லை உதாரணமாக நீங்கள் தினசரி பொருட்களை நுகர்வு செய்ய சந்தைக்கு செல்பவராக இருந்தால் நீங்கள் கடைகளில் கொடுக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக ஒரு துணி பையை பயன்படுத்தலாம். இதுவே ஒரு பெரிய மாற்றத்துக்கு வழிவகுக்கும்.
மேலும் தினசரி வேலைக்கு செல்பவர்கள் தங்களுக்கான குடிநீரை வீட்டில் இருந்தே ஒரு உலோக போத்தலில் எடுத்து செல்லலாம்.
இதனால் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை அடிக்கடி கொள்வனவு செய்ய வேண்டிய தேவை குறைவடையும். இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
ஆடை கடைகள், நகை கடைகள் மற்றும் சந்தைகள் என்பவற்றில் நுகர்வோருக்கு துணிப்பைகளில் தங்களின் உற்பத்திகளை விற்பனை செய்ய வேண்டும் என அரசாங்கம் சட்டம் கொண்டுவருவதனாலும் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை கணிசமாக குறைக்க முடியும் என்பது உறுதி.
அறிவூட்டுவது அவசியம்
மேலும் ஒவ்வொரு தனி மனிதனும் பிளாஸ்டிக் அற்ற நாட்டை உருவாக்க பாடுபட தேவையில்லை.குறைந்த பட்சம் பிளாஸ்டிக் அற்ற வீட்டை உருவாக்க முயற்சித்தாலே போதும் இதன் பாவனையை குறைக்க முடியும்.
அதுமட்டுமன்றி பாடசாலை மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களின் மாசு மட்டும் அதன் விளைவுகள் குறித்து அறிவூட்டுவதும் அவசியம்.
இது போன்ற சிறிய முயற்சிகளை மேற்கொண்டாலே இலகுவில் பிளாஸ்டிக் மாசுகள் அற்ற தூய்மையான நாட்டை உருவாக்க முடியும்.





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
