தேர்தல்களை ஒத்திவைக்கும் திட்டம் இல்லை: ஐ.தே.க. திட்டவட்டம்
பிரதான தேர்தல்களை ஒத்திவைப்பதற்காகச் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் எவ்வித திட்டமும் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடையாது என கட்சியின் செயலாளர் ரவி கருணாநாயக்க(Ravi Karunanayake) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் எனவும், சுயாதீன பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க களமிறங்குவார் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
நாட்டை மீட்கக்கூடிய அனுபவம்
"ரணில் விக்ரமசிங்கவுக்கு அனைத்து கட்சிகளினதும் ஆதரவு உள்ளது. நாட்டை மீட்கக்கூடிய அனுபவமும் அவருக்குத்தான் உள்ளது.

ரணிலின் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை நாட்டு மக்களும் உணர்ந்துள்ளனர். சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு எவ்வித திட்டமும் இல்லை.
அது தொடர்பில் தனிப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே அனைத்து கட்சிகளினதும் நிலைப்பாடாகும்."என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
புடின் அமைதியை விரும்பவில்லை! மூன்றாம் உலகப் போருக்கு தயாராகுங்கள்: ஐரோப்பிய நாடொன்றின் அமைச்சர் News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan