கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர பயண எச்சரிக்கை
கனேடிய(Canada)அரசாங்கம் இந்த கோடை காலத்தில் வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ளும் தமது நாட்டு மக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் சிலவற்றில் தீவிரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தீவிரவாத அச்சுறுத்தல்கள்
இந்நிலையில் ஐரோப்பாவின் சில நகரங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இது குறித்து அவதானத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் தாக்குதல் இடம் பெற்று பலர் உயிரிழந்துள்ளதுடன் அதிகமானோர் காயமடைந்திருந்தனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தக் கோடை காலத்தில் பிரான்சின் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.
எனவே குறித்த பகுதியில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிக அளவில் காணப்படுவதாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பிரான்ஸ், இத்தாலி, பஹாமாஸ் போன்ற நாடுகளில் தீவிரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் உள்நாட்டு செய்தி ஊடகங்களின் தகவல்களின் அடிப்படையில் செயற்படுமாறும் கனேடிய அரசாங்கம் தமது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |