முல்லைத்தீவில் கடல் மற்றும் நிலப் பகுதிகளை அபகரிக்க திட்டம்
முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறை பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கொக்குழாய் வடக்குக்கும் நாயாறுக்கும் இடைப்பட்ட புலிபாய்ந்த கல் பகுதியின் தரை மற்றும் கடற்பகுதிகளை அபகரிப்பதற்கான திட்டங்கள் முழு வீச்சில் இடம் பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து ஊடகவியலாளர் குழு ஒன்று குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்ட போதே அப்பகுதி மக்கள் தமது ஆதங்கங்களை முன்வைத்தனர் .
குறித்த சம்பவம் தொடர்பில் அப்போது மக்கள் கருத்து தெரிவிக்கையில், பரம்பரை பரம்பரையாக குறித்த கடற் பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .

இந்நிலையில் தென் இலங்கையைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் சுமார் நான்குக்கும் மேற்பட்ட வாடிகளை சட்டவிரோதமான முறையில் அமைத்து புலி பாய்ந்தகல் கடற்பரப்பை முற்றுமுழுதாக அபகரிக்கும் நோக்கில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமைக்கப்பட்ட சுமார் நான்கு வாடிகளிலும் சுமார் 16 பேர் வரை தங்கி அன்று தொழில் செய்து வரும் நிலையில் குறித்த வாடிகளில் மது விருந்துகள் இடம்பெற்றதற்கான ஆதாரங்களும் காணப்படுகிறது.
பெளத்த மதத்தலைவர் ஒருவரின் கண்காணிப்பு
முல்லைத்தீவை பூர்விகமாக கொண்ட கடற்றொழிலாளர்கள் பரம்பரை பரம்பரையாக தொழில் செய்து வரும் கடற்பகுதியும் அதனோடு சேர்ந்த சுமார் 100 ஏக்கர் காணியையும் தெற்கைச் சேர்ந்தவர்களை குடியமர்த்துவதற்காகான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

இதன் பின்புலத்தில் பெளத்த மதத்தலைவர் ஒருவரின் கண்காணிப்பில் மக்களை குடியேற்றுவதற்கான திட்டங்கள் முழு வீச்சில் இடம் பெற்றுவருவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் அச்சம் வெளியிடுகின்றனர்.
அம்பாறை தமிழ் மக்களின் வரலாற்று முக்கியத்துவமான நாள்! தமிழ் தொழிலதிபரின் நெகிழ்ச்சியான செயல் (Video)
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் வெலி ஓயாப் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்பை மீறி பெரும்பான்மை இனத்தவர்களுக்கான காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டது. குறித்த பகுதியில் வளமான சுமார் ஆறு நன்னீர் குளங்கள் காணப்படுகின்ற நிலையில் அதன் சூழ உள்ள பகுதிகள் ஆங்கிலேயர் காலத்து உறுதி பாத்திரங்கள் தமிழ் மக்களிடம் காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில் அப் பிரதேசத்தில் அடக்காத சிங்கள குடியேற்றங்களை நிறுவி தமிழ் மக்களின் பரம்பரையான நன்னீர் மீன்பிடியை இல்லாமல் செய்துவிட்டார்கள். தற்போது முல்லைத்தீவு மாவட்ட மீனவ மக்களின் வாழ்வாதார தொழிலாக காணப்படும் புலிபாய்ந்த கல் பகுதியின் கடல் வளத்தையும் நில வளத்தையும் தெற்கைச் சேர்ந்தவர்களுக்கு தாரை வார்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு உடந்தையாக சில அதிகாரிகள் செயற்பாட்டுவருவதை அறியக்கூடியதாக உள்ளது.
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri