அம்பாறை தமிழ் மக்களின் வரலாற்று முக்கியத்துவமான நாள்! தமிழ் தொழிலதிபரின் நெகிழ்ச்சியான செயல் (Video)
புதிய இணைப்பு
அம்பாறை - பொத்துவில், கனகர் கிராமத்தில் காணி வழங்கும் செயற்பாட்டுக்கு ஐபிசி நிறுவனத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் பெரிதும் உருதுணையாக இருந்ததாகவும், இந்த செயற்பாட்டிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.
அம்பாறை - பொத்துவில், கனகர் கிராமத்தில் பலதசாப்தங்களாக இழுபறி நிலையில் இருந்த மக்களுடைய காணியை மீள கையளிக்கும் செயற்பாடு கிழக்கு ஆளுநர் தலைமையில் அண்மையில் இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
மனிதாபிமான செயற்பாடு
மேலும் தெரிவிக்கையில், இந்த காணியை துப்பரவு செய்து மக்களிடம் கையளிக்கும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்திருந்தால் சுமார் இரண்டு வருடங்கள் கடந்திருக்கும்.
இதற்கு பிரதான காரணம் அரசாங்கத்தில் காணப்பட்ட பொருளாதார சிக்கல் நிலையாகும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஐபிசி நிறுவனத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் மனிதாபிமான ரீதியாக தானாக முன்வந்து இதனை பொறுப்பேற்றார்.
அதற்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். அரசாங்கம் பொருளாதார சிக்கலில் இருக்கும் இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தோடு கைகோர்த்து மக்களுக்கு உதவும் வகையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது பெரிதும் உறுதுணையாக இருக்கும்'' என்றார்.
பொத்துவில் கனகர் கிராம மக்களின் நில மீட்பு போராட்டம்! காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கை இறுதிக்கட்டத்தில்
முதலாம் இணைப்பு
அம்பாறையிலுள்ள பொத்துவில் கனகர் கிராமத்தில் சுமார் 73 தமிழ் குடும்பங்களுக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு இன்று (11.11.2023) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முன்னிலையில் ஐ.பி.சி தமிழ் குழுமத்தின் தலைவர் மற்றும் தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரனின் நிதி பங்களிப்போடு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் கனகர் கிராமத்தில் பூர்வீகமாக குடியிருந்து யுத்த காலத்தில் வெளியேறிய மக்களை மீள்குடியேற்றும் முகமாக அப்பிரதேச மக்களால் பல வருடங்களாக போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
இந்நிலையில் சுமார் பல தசாப்தங்களுக்கு மேலாக இந்த மக்களுக்கு காணி வழங்கப்படாமல் பெரும் இழுபறியில் இருந்து வந்துள்ளது.
இதனையடுத்து காணி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் ஐ.பி.சி தமிழ் குழுமத்தின் தலைவரிடம் முன்வைத்தமைக்கு அமைவாகவே இந்த திட்டம் சாத்தியமாகியுள்ளது.
மேலும் காணி வழங்குவதற்கான பத்திரங்களை வழங்குதல், துப்புரவு பணிகள் போன்றவையும் ஐ.பி.சி தமிழ் குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரனின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான கலையரசன், முஷரப், கபில அதுகோரல, ஐ.பி.சி தமிழ் நிறுவன பணிப்பாளர் கந்தையா பாஸ்கரன், பொத்துவில் பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர், கனகர் கிராமத்தில் முதற்கட்டமாக மீள்குடியேற்றப்பட்ட பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.