நோர்வூட் நகர் உள்ளிட்ட இடங்கள் நோர்வூட் பொலிஸாரால் திடீர் சோதனை
நோர்வூட் நகரில் உள்ள கடைகள் மற்றும் பொது இடங்கள் நோர்வூட் பொலிஸாரால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இன்று இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது பொகவந்தலாவையில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பேருந்து ஒன்று பொலிஸாரால் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது பேருந்திலிருந்த பயணிகள் யாவரும் கீழே இறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அப்போது முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பேணாமலும் வந்த பயணிகள் கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன், சிலர் நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் சுகாதார வழிகாட்டல்களை மீறி பயணிகளை ஏற்றி வந்த பேருந்தின் சாரதியும், நடத்துனரும் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பகுதியில் இன்றும் ஆங்காங்கே கோவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






