பிரமிக்க வைக்கும் வாக்குகள் : தாம் இனவாதமற்றவன் எனக் கூறும் பியதாச
2024 செப்டெம்பர் 21ஆம் திகதியன்று நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வர்த்தகருமான பியதாச, சில உயர்மட்ட வேட்பாளர்களை விட அதிகமான வாக்குகளை பெற்று ஏழாவது இடத்தைப் பிடித்தமை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொலைக்காட்சி உரைகள், தேர்தல் கூட்டங்கள், பதாதைகள்; அல்லது துண்டுப் பிரசுரங்கள் எதுவுமின்றி அவர்; 47,543 வாக்குகளை பெற்றுள்ளார்.
1000க்கும் அதிகமான வாக்குகள்
இதன்படி அவர், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச முன்னாள் விளையாட்டு அமைச்சர் ரொசான் ரணசிங்க,சோசலிஸ கட்சி வேட்பாளர் நுவான் போபகே உட்பட்டவர்களை காட்டிலும் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.
ஒரு காலத்தில், ஐக்கிய தேசியக்கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர், ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி மற்றும் நுவரெலியா போன்ற பகுதிகளில் உள்ள வாக்காளர்களின் அதிகளவு ஆதரவை பெற்றுள்ளார்
பொலன்னறுவை தவிர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் அவர் 1000க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னம்
தாம் தமது வணிகத்தின் ஒரு பகுதியாக வடக்கு மற்றும் கிழக்கில் அதிக அளவில் பயணம் செய்த ஒருவன் என்பதுடன், தாம் இன, மத, வேறு வேறுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்தும் மனிதன் என்று கே கே பியதாச குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை மாவட்டத்தின் ஹக்மன கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், சிறுவயதிலிருந்தே நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு 1971ஆம் ஆண்டு நுவரெலியாவில் குடியேறத் தீர்மானித்தார்.
இதேவேளை தமக்கு கிடைத்த கணிணி சின்னத்தை சில வாக்காளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னமான தொலைபேசி என்று தவறாகக் கருதியதால் தான் 50,000 வாக்குகளை அண்மித்ததாக கூறுவோருக்கு பதில் வழங்கியுள்ள பியதாச, தமக்கு வாக்களித்தவர்கள் அப்படியொரு தவறைச் செய்ததாக தாம் நினைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |