சர்வதேசத்திடம் சிங்கள மக்களிற்காக இரக்கப்படும் முக்கிய தமிழ் அரசியல்வாதி - அம்பலப்படுத்துகிறார் சென் கந்தையா
ஜி.எஸ்.பி பிளஸ் நிறுத்துவதால் சிங்கள மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளதாக பிரித்தானியத் தொழிற் கட்சியின் தமிழ்ப் பிரிவின் தலைவர் சென் கந்தையா தெரிவித்துள்ளார்.
செவ்வி ஒன்றில் பதில் அளிக்கும் போதே அவர் மேற்கூறியவாறு தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
சுமந்திரன் அவர்கள் சில நிலைப்பாடுகளை எடுப்பார் தன்னிச்சையாகவே. இதில் முக்கியமான உத்தரமாக ஒன்றைக் கூறுகிறேன்.
ஜி.எஸ்.பி பிளஸ் என்பதைத் தடை செய்ய வேண்டும் எனச் சொல்லி தொழிற்கட்சியில் இருக்கக்கூடிய எம்.பி மார் அங்கு குற்றம் சுமத்தினார்கள்.
நான் அவர்களிடம் சென்று கதைத்தபோது அவர்கள் சொன்னார்கள், உங்களுடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இந்த ஜி.எஸ்.பி பிளஸ் ஐ அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும் என்று தான் சொல்லுகிறார்கள்.
ஏனெனில் அது தமிழ் மக்களையும் பாதிக்கும் என்று.அதைக் கேட்டு அதிர்ச்ச்சு அடைந்தேன்.
பின்பு நான் சுமந்திரனுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் எனக்கு சொன்னார் ஜி.எஸ்.பி பிளஸ் நிறுத்துவதால் சிங்கள மக்களுக்கும் துன்பம் வரும்.அவர்களின் பொருளாதாரம் பாதிக்கப்படும். அப்படியான செயலை நாம் ஆதரிக்கவில்லை எனக் கூறியதாக என அவர் தெரிவித்துள்ளார்.