பிள்ளையானின் இராணுவப் பிரிவை இலக்கு வைத்து புலனாய்வுப் பிரிவின் அதிரடி நடவடிக்கை
பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மேலும் அறுவரை கைது செய்வதற்கு குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினுடைய விசேட அணியொன்னு மட்டக்களப்பு நோக்கி நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிள்ளையானின் தகவலின் அடிப்படையில் இனியபாரதியின் கைது இடம்பெற்றது. இந்த இருவரது குற்றச்சாடடுக்களுடன் தொடர்புபட்டே மேலதிகமாக அறுவரது கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையிவ் துணை ஆயுதக்குழுக்கள் வலுவாக இருந்த காலப்பகுதியில் மட்டக்களப்பு மற்றும் அதை அண்டிய பகுதியில் இடம்பெற்ற அரசியல்வாதிகள், கல்வியலாளர்கள் மற்றும் பொதுமக்களின் கொலைகளோடு தொடர்புபட்ட விவரங்கள் தற்போது கைதுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த கைதுகளுக்கு காரணமானவர்கள் யார்? கைதின் பின்னணியில் செயற்பட்டவர்கள் யார்? என்பது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...

தேங்காய் சிதறுவதை போல சுமந்திரனும் சாணக்கியனும் சிதற வேண்டும்! கதவடைப்புக்கு விடுக்கப்பட்ட எதிர்ப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



