ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் புலனாய்வு அமைப்புக்கள் .. வெளியான முக்கிய தகவல்
ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் நாட்டின் புலனாய்வு அமைப்புக்கள் இருப்பது தெரியவந்துள்ளது என சமூக மற்றும் மத மையத்தின் இயக்குநர் பாதிரியார் ரோஹன் சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று (16.04.2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஒன்றிலேயே அவர மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனும், அவரது முன்னாள் ஊடக செய்தித் தொடர்பாளர் அசாத் மௌலானாவும் ஈஸ்டர் தாக்குதல்களில் தொடர்புடைய நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் சமூக மற்றும் மத மையம் தெரிவித்துள்ளது.
பிள்ளையான் - அசாத் மௌலானா
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, நேற்று மேற்கொண்ட செய்தியாளர் சந்திப்பில், ஈஸ்டர் தாக்குதல்களில் பிள்ளையான் தொடர்புடையவர் என்ற கருத்தை உருவாக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன என்று கூறினார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், சட்டத்தரணி உதய கம்மன்பில, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானைச் சந்தித்து நேற்று முன்தினம் (15) அரை மணிநேரம் கலந்துரையாடியதுடன் அது தொடர்பிலான தகவல்களை நேற்று வெளிப்படுத்தியிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
