கவனிக்கப்படாத ஆதாரங்கள்! ரணிலின் விசாரணைக்குழு தொடர்பில் கேள்வி எழுப்பிய கம்மன்பில
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு விசாரணைக் குழுவின் அறிக்கைத்தொடர்பில் பிள்ளையானின் வழக்கறிஞராக முன்வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில முன்னதாக பல கேள்விகளை எழுப்பியிருந்தார் என சிவில் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பல தகவல்களை சனல் 4 ஊடாக அம்பலப்படுத்திய ஹன்சீர் ஆசாத் மௌலானா மற்றும் சாரா ஜாஸ்மின் ஆகியோருக்கும் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பை “ஸ்கிரிப்ட்“ என்று நிராகரிக்காமல் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறும் அவர்கள் அவசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
மேற்படி சிவில் சமூக ஆர்வலர்கள் நேற்று தாக்குதலின் ஆறாவது ஆண்டு நிறைவையொட்டி, அதன் கவனிக்கப்படாத பல கண்டுபிடிப்புகள் குறித்து விசாரிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி 13 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
கவனிக்கப்படாத ஆதாரங்கள்
குறித்த அறிக்கையானது, அதன் நிர்வாக இயக்குநர் ரோஹன் சில்வாவினால் படுகொலை தொடர்பான கவனிக்கப்படாத ஆதாரங்களின் பல அம்சங்களின் விவரங்களுடன் வெளியிடப்பட்டது.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட இற்த அறிக்கை, அதன் நகல்களை பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் (CCIB) இயக்குநர் ஷானி அபேசேகர ஆகியோருக்கு அனுப்பியதாகக் ரோஹன் சில்வா கூறியுள்ளார்.
இந்த ஆவணம் அவசரமாக விசாரிக்கப்பட வேண்டிய ஐந்து பகுதிகளை முக்கியமாக விரிவாகக் கூறியிருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆராயப்படாத தகவல்கள்
ஆராயப்படாத இந்த தகவல்கள், ஒரு நாட்டில் ஒரு தீவிரவாத தாக்குதலை நடத்துவதற்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட சதித்திட்டத்தை அடைய திட்டமிடப்பட்டதா என்ற வலுவான சந்தேகங்களை உருவாக்குகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ. இமாமின் விசாரணைக் குழுவின் அறிக்கையிலிருந்து மேற்கோள் காட்டப்பட்ட இந்த உண்மைகளை கைது செய்யப்பட்ட பிள்ளையானின் வழக்கறிஞராக முன்வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில முன்னதாக எழுப்பினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பல ஆணைக்குழுக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட இந்த கவனிக்கப்படாத அனைத்து ஆதாரங்களையும் தவறாமல் பார்ப்பது இந்த அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஏனெனில் இது கடந்த ஆண்டு தேர்தல் அறிக்கையில் தற்போதைய அரசாங்கம் உறுதியளித்த வாக்குறுதியாகும் என்பதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
you may like this

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
