தேசிய மிருகக்காட்சிச்சாலையில் கைவரிசை காட்டிய திருடர்கள்
தெஹிவளையில் அமைந்துள்ள தேசிய மிருகக்காட்சிச்சாலைக்குள் அத்துமீறி உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்து புறாக்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் கடந்த(4) ஆம் திகதி இரவு நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
தெஹிவளை மிருகக் காட்சிச் சாலையின் புறாக்கள் பகுதியில் ஒரு கூண்டை உடைத்துத் திறந்துள்ள திருடர்கள் அங்கிருந்த 32 புறாக்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த புறாக்கள் நீதிமன்ற உத்தரவொன்றின் பிரகாரம் வழக்குப் பொருட்களாக மிருகக் காட்சிச் சாலையில் தங்க வைக்கப்பட்டிருந்தவையாகும்.
திருட்டுச் சம்பவம் தொடர்பாகவோ, திருடப்பட்ட புறாக்கள் தொடர்பாகவோ இதுவரை எதுவித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



