வெடுக்குநாறிமலை சிவன்ஆலய முன்னாள் தலைவர்- செயலாளரை ரிஐடி அழைப்பு
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸார் (ரிஐடி) அழைத்துள்ளார்கள்.
வவுனியா, நெடுங்கேணி பொலிசார் ஊடாக குறித்த அழைப்பாணை கடிதங்கள் இன்று (06) வழங்கப்பட்டன.
அழைப்பாணை கடிதம்
வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் தலைவர் சசிகுமாரும் செயலாளர் தமிழ்ச்செல்வனும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைக்காக எதிர்வரும் எதிர்வரும் 9ஆம் திகதி காலை 10 மணிக்கு வவுனியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.
வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே குறித்த இருவரையும் வருகை தருமாறு அழைப்பாணை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் சிவாரத்திரி தினத்தன்று குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்ததுடன், தற்போது ஆலயத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு பல மாதங்கள் ஆகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
