காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட தொலைபேசிப் பொதி: விசாரணைகள் ஆரம்பம்
காலி (Galle) சிறைச்சாலைக்குள் வீசியெறியப்பட்ட தொலைபேசிகள் அடங்கிய பொதிஒன்றை சிறைச்சாலை காவலர்கள் கைப்பற்றி, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
காலி சிறைச்சாலையின் பின்புற மதிலுக்கு மேலாக பொதியொன்று சிறைச்சாலைக்குள் வந்து விழுவதை அப்பகுதியில் காவலுக்கு நின்றிருந்த சிறைக்காவலர் கண்ணுற்றுள்ளார்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள்
அதனையடுத்து சிறைச்சாலை காவலர்கள் குறித்த பொதியை கைப்பற்றி பிரித்துப் பார்த்த போது, அதற்குள் ஐந்து மொபைல் போன்கள், மூன்று மின்னேற்றிகள், நான்கு லைட்டர்கள் மற்றும் முப்பது புகையிலை என்பன காணப்பட்டுள்ளன.
பொதியை வீசியெறிந்த நபர் குறித்தும், அதனைப் பெற்றுக் கொள்ள இருந்த நபர் குறித்தும் தகவல் ஏதும் கிடைக்காத நிலையில் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை நிர்வாகம் மற்றும் பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், கைப்பற்றப்பட்ட பொதி, மேலதிக விசாரணைகளுக்காக காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |