நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த பயணிகள் கப்பல்: இருவர் மாயம்-செய்திகளின் தொகுப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டின் கப்பல் ஒன்று துறைமுகத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் ஓரியண்டல் மிண்டோரோ மாகாணத்தில் உள்ள கலபன் நகரில்
இருந்து, பயணிகள் கப்பல் ஒன்று தலைநகர் மணிலாவின் தெற்கு துறைமுகத்தை நோக்கி
சென்றுள்ளது.
இந்த கப்பலில் 49 பயணிகள் மற்றும் 38 பணியாளர்கள் இருந்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம்
இந்நிலையில், துறைமுகத்தை நெருங்கியபோது இயந்திர கோளாறு காரணமாக கப்பலில் தீப்பிடித்துள்ளது.
இதன்போது கப்பல் துறைமுகத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்ததுள்ளது. கப்பல் முழுவதும் தீ பரவியதால் உயிரை காப்பாற்றிக்கொள்ள பலர் கடலில் குதித்துள்ளனர்.
இந்நிலையில்,உடனடியாக கடலோர காவல்படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு, கடலில் தத்தளித்தவர்களை மீட்டுள்ளனர்.
கடலில் குதித்தவர்களில் 80க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில் இருவரை தேடும் பணி தொடர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
