மருந்து விநியோகஸ்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
மருந்து விநியோகஸ்தர்கள் தங்கள் சேவைகளை முறையாகச் செய்யாவிட்டால், அரசாங்கம் தலையிட்டு மருந்துகளை இறக்குமதி செய்யும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,மருந்துச் சந்தையை மருந்து விநியோகஸ்தர்கள் கட்டுப்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மருந்து இறக்குமதி
மருந்து இறக்குமதி தொடர்பாக 7 நாடுகளுடன் தற்போது இராஜதந்திர கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றது.
நாட்டில் மருந்துப் பற்றாக்குறை இருப்பதாக பொய்யான பிரச்சாரத்தைப் பரப்பி, சில மருந்து விநியோகஸ்தர்கள் அதிக விலைக்கு மருந்துகளை வாங்குவதற்குச் செயற்படுகின்றனர்.
அரசாங்க கொள்முதல் செயல்முறை ஒரு குறிப்பிட்ட அளவு நேரத்தை எடுக்கும். எதிர்காலத்தில் இந்த செயல்முறையை மேலும் திறம்படச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
