60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி (Video)
சுகாதார அலுவலகப் பிரிவில் 60 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கான மூன்றாவது பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்புக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, காத்தான்குடி சுகாதார அலுவலகப் பிரிவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மூன்றாவது பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று (30) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி 167பி, 167டி ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுககளிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த பைசர் தடுப்பூசி போடப்பட்டது.
புதிய காத்தான்குடி, நூறானிய்யா ஜும்ஆப்பள்ளிவாயலில் இத் தடுப்பூசி போடும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீனின் (U.L. Nasirdeen) மேற்பார்வையில் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.பசீர் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பங்கு பற்றுதலுடன் தாதியர்களினால் இத் தடுப்பூசி போடப்பட்டது.
ஏற்கனவே இரண்டு தடவைகள் செனோபாம் தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.




Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam