18 முதல் 19 அகவைக்குட்பட்ட பிள்ளைகளுக்கு ஃபைசர் தடுப்பூசி
இலங்கையின் தடுப்பூசி தொழில்நுட்பக்குழு 18 முதல் 19 அகவைக்குட்பட்ட பிள்ளைகளுக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதல் அளவை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழங்க முடிவு செய்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தடுப்பூசி தொழிநுட்பக்குழு, 15-19 அகவைக்குட்பட்ட பிள்ளைகளுக்கு தடுப்பூசிகளை வழங்க தமது ஒப்புதலை வழங்கியிருந்தது.
இதனையடுத்து தடுப்பூசி வழங்கல், அகவை அடிப்படையில் இறங்கு வரிசையில் மேற்கொள்ளப்படும் என்று மருத்துவத் துறையினர் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், ஆரோக்கியமான பிள்ளைகளுக்கான தடுப்பூசி திட்டத்தின் முதல் படியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரச மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி தடுப்பூசி வழங்கல், சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகம் மற்றும் அரச மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும்.
இதேவேளை,நாடு முழுவதும் உள்ள மருத்துவ அதிகாரிகள் அலுவலகங்களை பயன்படுத்தும் அதே பொறிமுறையைப் பயன்படுத்தி 15-19 அகவைக்குட்பட்ட ஆரோக்கியமான பிள்ளைகளுக்கு ஃபைசர் தடுப்பூசியை வழங்க தமது சங்கம் முன்மொழிந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.





உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan
