எரிபொருள் நிலையத்தில் வைத்தியர்கள் உள்ளிட்டோர் மரியாதை குறைவாக நடத்தப்பட்டுள்ளமை குறித்த கலந்துரையாடல்

Jaffna Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Erimalai Aug 04, 2022 09:35 AM GMT
Report

ஊர்காவற்துறை எரிபொருள் நிலைய ஊழியரும், முகாமையாளரும் வைத்தியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டமை தொடர்பாக கடந்த திங்கட்கிழமை வடமாகாண பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ். தீவக வைத்தியசாலைகளுக்கான கிளை சங்கம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எரிபொருள் நிலைய ஊழியர்

அந்த அறிக்கையில் மேலும், எரிபொருள் நிலைய ஊழியர் வைத்தியசாலை ஊழியர்களை மரியாதைக் குறைவாக பேசும் பண்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவரை மாற்ற வேண்டும் என்று எமது சங்கத்தின் அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சமூகத்தில் எரிபொருள் வழங்குத்தலை காட்டிலும் மருத்துவர்களின் கண்ணியம் முக்கியமாகும்.

எரிபொருள் நிலையத்தில் வைத்தியர்கள் உள்ளிட்டோர் மரியாதை குறைவாக நடத்தப்பட்டுள்ளமை குறித்த கலந்துரையாடல் | Petrol Station Isuess

எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம்!

சுகாதார சேவையானது அத்தியாவசிய சேவை என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சானது சுற்றுநிரூபங்கள் வழங்கி ஒவ்வொரு மாகாணத்திற்கும் பொறுப்பான ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் தமது பிரதேச அரச அதிகாரிகள் மற்றும் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்து ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் பத்து சதவீதத்தை சுகாதார ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இருப்பின்னும் கடந்த மூன்று மாதங்களாக குறித்த ஒரு எரிபொருள் நிலைய ஊழியர் மட்டும் எரிபொருள் பெற்றுக்கொள்ள செல்லும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களை வார்த்தைகளால் மரியாதை குறைவாக தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.

எரிபொருள் நிலையத்தில் வைத்தியர்கள் உள்ளிட்டோர் மரியாதை குறைவாக நடத்தப்பட்டுள்ளமை குறித்த கலந்துரையாடல் | Petrol Station Isuess

முறைப்பாடுகள்

எரிபொருள் விநியோகிக்கும் நிலையில் எரிபொருளை வழங்க மறுத்த சந்தர்ப்பங்களும் உண்டு. இது தொடர்பாக ஊர்காவற்துறை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பொது முகாமையாளருக்கு ஊர்காவற்துறை வைத்தியசாலை அத்தியட்சகர் பலமுறை முறைப்பாடு செய்தும் உரிய நடவடிக்கைகள் அந்த எரிபொருள் நிலைய ஊழியர் எதிராக இதுவரை எடுக்கப்படவில்லை.

கடந்த மாதம் ஊர்க்காவற்துறை ஆதார வைத்தியசாலையின் கடமையாற்றும் வைத்தியர் ஒருவருக்கு எரிபொருள் வழங்க முடியாது என்று மறுத்து அவரை கடுமையாக பேசி அவமானப்படுத்தியதோடு மட்டுமன்றி அவரை தாக்கும் வகையில் பாசாங்கு செய்ததாக அவ்வைத்தியர் முறைப்பாடு செய்துள்ளார்.

இருந்த போதிலும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் தரப்பினர் எரிபொருள் நிலைய ஊழியர் மீதான உள்ளக விசாரணைக்கு அழுத்தம் கொடுத்தனர்.

எரிபொருள் நிலையத்தில் வைத்தியர்கள் உள்ளிட்டோர் மரியாதை குறைவாக நடத்தப்பட்டுள்ளமை குறித்த கலந்துரையாடல் | Petrol Station Isuess

விசாரணை

அது முடியும் வரை அவரை வேறு சில பதவிகளுக்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தது. இது எமக்கு சற்று ஆறுதலாக அமைந்தது.

ஊர்காவற்துறை பலநோக்கு கூட்டுறவு சங்க குழு உள்ளக விசாரணை செய்ய அவர்களுக்கு நேரம் தேவைப்படுவதாக கூறியதாலும் அக்கூட்டத்தில் சாதகமான முடிவுகள் எட்டப்படாமையாலும் எமது சங்கத்தின் அதிகாரிகள் ஒரு மாத கால நீண்ட அவகாசத்தை அவர்களுக்கு வழங்கினர்.

செப்டம்பர் 1 ஆம் திகதிக்குள் உள்ளக விசாரணையை முடித்து எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் யாழ்ப்பாணத் தீவக மருத்துவமனைகளில் இப்பெட்ரோல் நிலையம் மூலமாக எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வைத்தியசாலைகளான ஊர்காவற்துறை, வேலணை மற்றும் காரைநகர் வைத்தியசாலைகள் எந்தவித முன்னறிவித்தலும் இன்றி தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்வதை தவிர்க்க முடியாததாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US